பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை படைத்தது இவ்வுலகு. (578)


இந்த உலகத்தையே உரிமையாக பெறக் கூடிய வாய்ப்பும், வல்லமையும், தன் கடமையிலே கண்ணும் கருத்துமாகக் கொண்டு உழைப்பவர்க்குக் கிடைக்கும்.

விளையாட்டுக்கு இந்தக் கருத்து, எவ்வளவு பொருந்தி வருகிறது பார்த்தீர்களா?

உழைப்பை மதிக்கிற மக்களைவிட, உழைப்பை வெறுக்கிற மக்களே இந்த உலகில் அதிகம். உழைப்பை மறுப்பதே, நாகரிகம் என்பது தான், எங்காலத்துக் கொள்கை என்றேன் இடைமறித்து.

விளையாட்டு என்பது நுணுக்கம் நிறைந்த காரியமாகிறது. அந்த நுணுக்கத்தில், நுண்திறன் களில், மனம் நுழைந்து, ஒன்றித்து ஈடுபடுகிற போது தான், எதிர்பார்க்கும் பயன்கள் விளைந்து வருகின்றன.

அப்படி உழைப்பில் ஈடுபடுகின்றவர்களைச் சுற்றிலும் உள்ளவர்கள் சுற்றத்தார், நண்பர்கள், நயப்பவர்கள் எல்லோரும், அவர்களின் மனதை அலைக்கழித்துவிடவும், சோர்வடையச் செய்யவும் கூடிய வகையில் தான் பேசுவார்கள். சில சமயங் களில் ஏசுவார்கள்.