பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 23.9

விளையாட்டையே வெறுக்கின்ற அளவுக்கு விவாதிப்பார்கள். அந்த சமயங்களில், மனதை சலனத்திற்கு ஆளாக்காமல், தான் கொண்ட இலட் சியத்திலே குறியாக இருப்பவர்கள் தான், உலகில் உயர்ந்த நிலையை அடைகின்றார்கள். உலகோர் மதிக்கும் உயர்ந்த ஒரு தலைமையைப் பெறு கின்றார்கள். உலகம் போற்றி, மறவாமல் நினைத்து மகிழும் செம்மை நிலையை எய்து

கின்றார்கள்.

உண்மை தான் என்றேன்.

குளத்தளவே ஆகும் நீரின் உயரம். நிலத் தளவே ஆகும் பயிரின் தன்மை, மனத்தளவே ஆகும் பண்பும். அன்பும். அதுபோலவே, உழைப் பளவே உயரும் பேரும் புகழும்.

அதனால் தான் மறவாத மனம் என்று பாடினேன். மனத்திலே எண்ணுகிற எண்ணம் போல் தான் எதுவும் நடைபெறும் என்பதால் தான், நமது முன்னோர்கள், மனம் போல் வாழ்வு என்றார்கள்.

என்ன எண்ணம் மனதில் எழுகிறதோ, விளை கிறதோ, வளர்கிறதோ, அதற்கேற்ற செயல்கள் தான் நிகழும். இந்தக் கருத்தை, மனதில் பதித்துக்

கொள்கிற போது தான், விளையாட்டு வீரர்கள், தங்கள் குறிக்கோளில் வெற்றிகாண முடியும். சாதனை படைக்க முடியும்.