பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணிய திண்ணியர் ஆகப் பெறின். (666)

எண்ணியதைப் பெற, திண்ணியர் ஆக வேண்டும் என்றேன். ஆமாம். மனதில் மாறாத உறுதியுடையவராக விளங்க வேண்டும். அதுவே, உடலில் வலிமையை உண்டாக்கும் என்பதையும் அறிய வேண்டும், என்று வள்ளுவர் கூறி வந்த, போது, மீண்டும் இடைமறித்தேன்.

தற்போது, விளையாட்டுப் போட்டிகளின் போது, வீரர்கள் எவ்வாறு செயல் படுகின்றார்கள் என்பதை ஆராய்ச்சி செய்த அறிவியல் வல்லுநர்கள் பயிற்சியாளர்கள், நீங்கள் கூறிய கருத்துக்கு ஏற்றாற் போலவே, கூறியிருக்கின்றார்கள்

சிறப்பாக விளையாடுவதற்கு உடல் திறன், 20 விழுக்காடு இருந்தால் போதும். மன உறுதியும், திண்மையும் 80 விழுக்காடு வரை தேவைப்படு: கிறது. பதறாத மனதும், சிதறாத நினைவும், கலங்காத குறிக்கோளும், கண்ணோட்டம் அகலாத நுணுக்கமும் தான் விளையாட்டில் மேன்மையை அளிக்கின்றன, வெற்றியை வழங்குகின்றன என்ற அவர்கள் கருத்தை, இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றேன்.

அது தான் அறிவான அணுகு முறை என்றார். அத்துடன் நின்று விட்டால் போதாது. அது பாதி