பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 24 Fo

கிணறு தாண்டிய நிலைக்கு ஆளாக்கி விடும். தான் ஏற்றி வந்த வீரனை, போர்க்களத்தில் தள்ளி விட்டு, ஒடிப் போகும் அறிவில்லாத குதிரையின் நிலைக்குக் கொண்டு போய் விடும்.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா (814): என்று நீங்கள் அழகாகப் பாடியிருக்கின்றீர்கள் என்று அந்தக் குறளைக் கூறினேன்.

ஆமாம். முடியும் என்று மனதில் உறுதி கொண்டு விட்ட பிறகு, ஒருவர் இரண்டு காரியங் களை கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.

ஒன்று. மனதில் சோர்வு கொள்ளக் கூடாது இரண்டு. காலம் தாழ்த்தக் கூடாது.

மனத் தளர்வு வந்து விட்டால், செயல் தளர்வு தானாகவே வந்து விடும். செயலில் தளர்ச்சி என்றால், காரியத்தை செய்யும் ஆர்வம் எழாமல், காலத்தைத் தள்ளிப் போடச் செய்யும்; கடமை. யையும் துறந்து விடச் செய்யும்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். (668)

தூக்கம் என்றால் தூங்கிப் போதல். நான் தூங்குக, (672) தூங்காமை (383) என்று குறளில் பாடிய போதெல்லாம், காலம் தாழ்த்துதல் என்ற பொருளில் தான் கூறியிருக்கிறேன் என்றார்.