பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 23.

நீண்டுயர்ந்த பனைமரத்தைத் தன்னுள்ளே அடக்கி காட்டும் தகைமை போலவே, திருக்குறள் அமைந் திருக்கிறது என்று இதன் சிறப்பை எடுத்துரைக் கிறார். -

இவ்வாறு, வேதத்தையும் விரித்துக்காட்டும் பண்புள்ள குறள்களை, வையத்துக்குத் துணை, என்று வாழ்த்தினார் மதுரைத்தமிழ் நாகனார் என்னும் புலவர். -

எண்ணியவர்களுக்கேற்ப எ ண் ண ங் க ைள மணற்கேணிபோல் மேலும் ஊறச்செய்து இறைத் தெடுத்துக் கொள்ளும் நுண்மை பெற்ற குறள்களில் ‘எல்லாம் இருக்கிறது. இதில் இல்லாதது எதுவும் இல்லை என்றே எல்லோரும் பாடினர். என்றும். வாடாத புகழ்மாலை சூடினர்.

“வள்ளுவரும் தங்குறள் வெண்பாவடியால் வைத்து

உள்ளுவ எல்லாம் அளந்தார் ஒர்ந்து’ என்று பரணர் என்னும் பெரும்புலவர் பாடியபடி தான், ஆராய்ச்சி முடிவுகள் பல வெளிப்பட்டிருக் கின்றன.

இந்த வையத்து மக்கள் மனதில் நினைப்பதை யெல்லாம் தாமே சிந்தித்துத் தம் குறள் அடிகளால் எழுதி அளந்து கூறிவிட்டார்.

திருக்குறளை ஆராய்ந்து ஆராய்ந்து, இது ஒரு நீதி நூல்: இது ஒரு காதல் நூல்: இது ஒரு