பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 249

எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும், மனிதர்கள் என்பவர்கள், பொன்னுக்கும், பொருளுக்கும், மண்ணுக்கும் இடத்திற்கும்தான் மாய்ந்து மாய்ந்து அலைந்திருக்கின்றார்கள் எ ன் ேற ன் மனக் கசப்புடன்.

அதனால்தான், நான் அவர்கள் மனதைமாற்ற,

இப்படிப் பாடினேன். அவர்கள் புரிந்துகொண்டிார்

களோ, இல்லையோ என்று சோகக் குரலில்

பேசினார்.

உடையார் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று (591)

எல்லாப் பொருளும் வளமும் உடையவர் என்று பெருமையாகப் பேசப்படுபவர் ஊக்கம் என்பதை உடையவராக இருந்தால்தான். மற்ற எந்தப் பொருள் இருந்தாலும்; அதை பொருள் என்று உலகத்தார் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் .

பொருளை ஏன் ஒத்துக் கொள்வதில்லை என்றேன்.

பொருளை உடையவர்கள், அதை இழந்து போகும் நேரம் வரும். ஐயகோ, எல்லாவற்றையும் இழந்து விட்டோமே, என்று ஏங்கிப் புலம்பிச் சாய்வர், சாவர்.

வள்ளுவர்-16