பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆனால், ஊக்கம் என்ற பொருளுடையவர்கள், எதையும் இழக்க மாட்டார்கள். அவர்கள் உள்ளத் திலே தான் வலிமை, முயற்சி, எழுச்சி போன்ற செல்வங்கள் இருக்கின்றனவே!

இந்த ஊக்கத்தைத்தான், இந்திய நாட்டவர் பெற்றிருக்கவில்லை போலும் என்றார் வள்ளுவர்.

எங்கள் விளையாட்டு வீரர்கள், பொருள், புகழ், களிப்பு, பெருமை என்று எல்லா நிலையிலும், நிறையவே பெற்றிருக்கின்றார்கள். இந்த ஊக்கம் என்பது குறைந்து போயிருப்பதால் தான், திறமை குறைந்தவர்களாகத் தோற்றுக் கொண்டிருக் கின்றார்கள் என்று என் எண்ணத்தைக் கூறினேன்.

இந்த ஊக்கக் குறைவு, எதனால் ஏற்படுகிறது என்று நீங்கள் கூற முடியுமா என்றேன்.

மிக எளிதாகப் பதில் கூறமுடியும்.

செய்ய வேண்டிய காரியத்தை காலம் கடந்து செய்தல்; செய்ய வேண்டியதை உரிய நேரத்தில் செய்யாமல் மறந்து போதல்; செயல் படி வேண்டாத சோம்பல்; அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் ஒருவரைக் கெடுக்கும் கொடும் படைகளாகும.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (605)