பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

போரில் மேற்கொள்கிற எல்லா தந்திரங்களும், நுட்பங்களும், விளையாட்டுப் போட்டிகளுக்கும் வேண்டியவைகளாகத்தானே இருக்கின்றன என்ற படி என்னை நோக்கினார்.

விளையாட்டுப் போ ட் டி க ள் தற்போது அப்படித்தான் ஆகிவிட்டன. கற்காலத்தில், உயிர் காக்கும் தற்காப்புக் கலையாக தொடங்கி; பொற்காலத்தில் ஒய்வை உல்லாசமாகப் போக்கும் ஒப்பற்றக் கலையாக மலர்ந்து; இடைக் காலத்தில் தாக்கும் கலையாக மாறி, இப்பொழுதோ, புகழ், பணம், பெருமைக்காக போராடும் களமாக, விளையாட்டுப் போட்டிகள் உ ரு ம .ா றி க் கொண்டன என்றேன்.

நீங்கள் சொல்வது சரியாகவே எனக்குப் படுகிறது. விளையாட்டுப் போட்டிகள் பற்றி, நீங்கள் காட்டிய வீடியோ படம், அப்படித்தான் என்னை எண்ணத் துரண்டுகிறது. எனது குறட் பாக்களில் பெரும் பகுதி போர் முறையை விளக்கு வதால், விளையாட்டுப் போட்டிகளின் எல்லா நிலைக்குமே பொருந்தும் என்பது என் நம்பிக்கை என்றார்.

இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் குறள்களில் ஒரிடத்தில் கூட, விளையாட்டு என்ற சொல் வரவில்லையே? அதெப்படி, நான் ஏற்றுக் கொள்ள முடியும்? எனக்குக் கொஞ்சம் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.