பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 257

எம் காலத்து வாழ்க்கையில், போர்களே பெரும் பங்கு வகித்தன. போர் என்பது பெரும். விளையாட்டாக மக்களிடையே விளங்கின.

அதனால் நான், பெரும் விளையாட்டுக்களின் பிறப்பிடமாக விளங்கிய போர்கள் பற்றியே நிறையக் கூ றி யி ரு க் கி ேற ன் . சாதாரண விளையாட்டுக்கள் பற்றி, நான் நினைத்துப் பார்க். காமல் விட்டு விட்டேன்.

தொல்காப்பியப் பெருந்தகை, @-Q100).5 என்னும் மெய்ப்பாட்டை விளக்க முனைந்த போது, செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு என்று. பாடினார். இவற்றை, அல்லல் நீத்த உவகை நான்கே என்று நறுக்குத் தெறித்தார்போற் குறித்துக் கூறினார்.

விளையாட்டு என்ற சொல்லுக்கு பொழுது போக்கு என்று பொருள் கண்ட காலமாக, எம். காலம் இருந்தது.

நாங்கள் விளையாட்-ைசி குறிக்க, நகை என்ற சொல்லைப் பயன்படுத்தினோம். நகை என்றால், இகழ்ச்சி, இன்பம், களிப்பு, சிரிப்பு. ஆபரணம் என்று பல பொருள்கள் இருந்த அதி: விளையாட்டு என்ற பொருளிலும் வந்தது (ஆனந்த விகடன் அகராதி. பக்கம் 1628, 20.34)