பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 359

நகை வகை (817) என்ற குறள்களில் சொல்லி

யிருக்றேன்.

ஆகவே. உங்கள் கால விளையாட்டுப் போட்டிகளில் வேகமும், தாக்கும் விறுவிறுப்பும், எதிரியை சாய்க்கும் கொடுசினமும் குலாவி வருவதை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்ப தால், மிக எளிதாக, போட்டிகளுக்கு வீரர்கள் தயாராக விளங்க வேண்டும் என்பதை விளக்க முடியும் என்றார். - or

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வல்லமைப் பற்றி விளக்கினால், மிகப் பயனுள்ள தாக இருக்கும் என்றேன். o

விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்பவர் கள், முதலில் தமது திறமை, தேர்ந்த வலிமை என்ன என்பதை, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். -

உன்னையே நீ எண்ணிப்பார் என்ற தத்துவம் பொருந்தும் என்றேன்.

தாம் ஆடப்போகிற விளையாட்டின் தன்மை, அதற்கு உதவக் கூடிய திறன்கள், தம்மால் என்ன முடியும் என்று உணர்ந்து கொண்டிருக்கிற உண்மை யான வலிமை, இவை மட்டுமன்றி; தம்மை எதிர்த்து விளையாடிப் போ கி ன் ற வர் க ளின் வலிமையை ஆராய்தல், அவர்களை எதிர்த்துப்