பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 263

அதனால் தான், வெற்றி வேண்டும் என்று விரும்புகின்ற விளையாட்டு வீரர்கள், தமக்குள்ள திறமையின் அளவை சீர்தூக்கிப் பார்த்து, தெரிந்து கொண்டு, போட்டியிட வேண்டும். இல்லை யென்றால், அவரது தோல்வி அனைத்தும் அறுந்ததாக, வெற்றி முறிந்ததாக தெரிந்து போகும்.

உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும் (480)

- உளவரை என்பது உள்ள வரை, இருப்பதை அறியும் வரை என்றும்; வளவரை என்பது அந்த ஆற்றலின் அளவு முறை என்றும் கொள்ளலாம். உள்ளதை உணர்ந்து கொள்ளாதபோது, வளமாக இருக்கின்ற தி ற ைம யு ம் , எல்லையில்லாமல் கெட்டுப்போகும் என்பதை அறிய வேண்டும்.

அடுத்த குணமாக, போராடுகிற வழிமுறையை எண்ண வேண்டும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலர் பற்றார்க்கு இனிது (865)

தனது திறமையின் அளவு என்ன? தனது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வழி முறைகள் என்ன? பிறருடன் போராடுகிறபோது, பொருத்தமாகக் கையாளக் கூடிய உத்திகள் என்ன? பிறருக்குத் தவறுகள் இழைக்காமல், பழி'