பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. விளையாடும் முன்னறிவு

வாழ்க்கையின் வளமான ஊட்டத்திற்கும், வாழ்வு தரும் முன்னேற்றத்திற்கும் அறிவுதான் அடிப்படையாக அமைந்திருக்கிறது.

வந்தபின் காப்பது, வாடி முயன்று தவிர்ப்பது, வருத்தப்படுவது என்பதில் தான் எல்லா மக்களும், முயற்சியை மேற்கொள்கின்றார்கள். ஆனால், இது இப்படித்தான் நிகழும், இன்ன வடிவில் தான் வரும், இப்படி ஏற்படுகிற சூழ்நிலை ஏற்பட்டிால். இந்த முறையில் தான் தடுத்தாள வேண்டும், என்று முயற்சிப்பவர்களே, முதிர்ந்த அறிவாளர்கள் என்று கருதப்படுகின்றார்கள்.

அவ்வாறு சிந்திக்காமல் வாழ்கின்றவர்கள் வாழ்க்கை, மழையால் கரைகின்ற மணல்வீடுபோல ; புயலால் வீழ்கின்ற முருங்கை மரம் போல, தீயால் எரிகின்ற துரும்புகள் போல, அழிந்துபோய் விடுகின்றது. கெடுகின்றது.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும் (435)