பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 25

விளையாட்டு என்பது வாழ்க்கையின் பிரதி பலிப்பல்லவா? அப்படியென்றால், விளையாட் டைப்பற்றி ஏன் அவர் ஒரு வார்த்தை கூட அதில் இல்லை என்று படித்துக் கொண்டே போனேன்.

இப்படிப் படிக்கும் பொழுதே அடிக்கடி அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டேன். அவரும் சலனம் எதுவும் காட்டாமல், சிரித்துக் கொண்டிருந்தார்.

நீங்கள் எழுதிய கருத்துக்களை சுவைத்துக் கேட்டேன். எல்லோரும் புகழ வேண்டும் என் பதற்காக நான் எழுதவில்லை. எனக்குள் எழுந்த கருத்துக்கள், எல்லோர்க்கும் உதவட்டும் என்ற எழுச்சியுடன் எழுதினேன். ஏற்றுக் கொண்டும் என்னைப் போற்றிக் கொண்டும், பின்பற்றிய தமிழ் கூறும் உலகத்தார் அனைவர்க்கும் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். என்றார் வள்ளுவர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

வள்ளுவ-2