பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உண்மைதான். க ண் ணு க் கு அத்தகைய ஆற்றல் உண்டு, அதற்கு ஈடு, இந்த அகிலத்தில் எதுவுமே இல்லை என்று என் கண்களை கூர்ந்து நோக்கினார். நான் மண்நோக்கிக் குனிந்த போது, அவரது மணிக்குரல் எழுப்பிய குறள், என் காது களில் சங்கீதமாகப்பாய்ந்தது.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்லது இல்லை பிற (710)

பிறருடைய கருத்தை அறிந்துகொள்கிற அளக்கும் கோலாக கண்கள் தாம் இருக்கின்றன. அவைதான் நுட்பமான அறிவை வளர்த்து விடுகின்றன.

அதுமட்டுமல்ல. கண்தான், எல்லா உறுப் பினுக்கும் மேலானது. உறுப்புக்குத் துன்பம் வந் தாலும், கண்தான் அழுது, தன் கருணையை வெளிப்படுத்தும் பாங்கு பெற்றது.

அப்படிப்பட்ட சிறப்பு பெற்றது கண்தான், பிறருடைய குறிப்பை குறிப்பால் அறிந்துகொள்ளும் கண்களை அறிவில் வாசல் என்பார்கள் ! அப்படிப் பயன் படாத கண்கள், முகத்தில் உள்ள புண்கள் தாம்.

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் (705) பிறர் இயங்குகிற இயக்கம், விளையாட்டில் முக்கியமானதாகும். மனித வாழ்க்கையே இயக்கம்