பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 271

தான் என்றால், விளையாட்டோ - இயக்கங்களின் சிகரமாக அமைந்துள்ளது.

ஒருவர் எப்படி இயங்குகிறார் என்பதை, அவரது கண் இயக்கத்தைக் கொண்டும், முக பாவத்தைக் கொண்டும் புரிந்து கொள்ளலாம். அந்த அறிவைத் தான், குறிப்பு என்று நான் கூறி னேன். பிறர் இயக்கத்தின் குறிப்பை அறியாத கண், கண்ணென்று எப்படி பெயர் பெற முடியும் என்பதற்காகத்தான், என்ன பயத்தவோ கண் என்று பாடினேன்.

ஆகவே, கண்ணும் நெஞ்சும் ஒன்றிப் போனால், காரியங்கள் எல்லாம் வீரியம் பெறும். சீரினைப் பெறும். சிறப்புக்களை பெற்றுத்தரும் என்றார். -

ஆனால், அறிவும் அடக்கமும் ஒன்று சேர்வ தில்லை. ஆத்திரம் அகங்காரம் என்ற பல தீக்குணங்கள் வந்து, அறிவைப் பாழாக்கி விடுகின்றன என்றார் வள்ளுவர்.