பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எக்காரணம் கொண்டும், தோற்கவே கூடாது என்ற பத்தாம் பசலித்தனமான கொள்கையும், பரவலாக கூடவே ஆரம்பித்தது.

எந்த வழியைப் பின்பற்றினாலும் பரவா யில்லை. வெற்றி பெற வேண்டும். பெற்றாக வேண்டும் என்று முற்றிப் போன வெறிப்போக்கு, முளை விட்டுத் தழைக்க ஆரம்பித்தது.

அதனால் ஏற்பட்ட வேகம், வெகுளியாகி, புலி யாகிப் போராடுகின்ற புயல் குணத்தைப் பிறப்பித்து விட்டது என்றேன்.

விளையாட்டானாலும் வாழ்க்கையானாலு வழிகள் ஒன்றுதான். மக்களிடையே உள்ள வாழ்க்கை முறை இரண்டு விதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று, ஒன்று பட்டு வாழ்கின்ற ஒற்றுமை உணர்வுடன் முன்னேறுவது. இரண்டு மற்றவர்களுடன் போராடி, வெற்றிகண்டு முன்னேறுவது.

விளையாட்டுக்கள் எல்லாம், ஒற்றுமை உணர் வுடன் போராடி வெற்றி காண முற்படுகின்ற விதங் களில் தான் வடிவம் பெற்றுள்ளன. போராடுகிற சூழ்நிலை ஏற்படுகிற பொழுதே, பொங்கி எழு கின்ற போர்க்குணங்கள், புயலாகி விடுகின்றன.

அங்கே அறிவு இடம் பெயர்ந்து கொள்ள. ஆத்திரம் தலைமையேற்றுக் கொள்கிறது. உடனே