பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சித்தனைகள் 277.

சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் (306,

உலகத்து நெருப்பானது சுடுவது, தான் சேர்ந்த இடத்தைத் தான். ஆனால் இந்தக் கோபம் எனும் நெருப்பு, சேர்ந்த இடத்தை மட்டுமல்ல, தான் சேராத இடத்தையும் சுட்டுப் பொசுக்கி விடும், என்றார் வள்ளுவர்.

உண்மைதான். விளையாட்டுக்கள் என்பது - ஒருவர்மட்டும் ஆடி மகிழ்வதல்ல. பொருதுவதல்ல. பலருடன் ஒன்று சேர்ந்து, ருை குழுவாக உருவாகிக் கொண்டு, விளையாடுவது தானே.

ஒருவர் கோபப்படுகிறபோது, அவரது திறமை கள், நுணுக்கங்கள். நுண் முயற்சிகள் எல்லாம் சீரிழந்து போவதுடன், சேர்ந்து விளையாடுகின்ற வர்களின் திறமைகளையும் சீரழித்து விடுகிறது. அங்கே ஒற்றுமை உணர்வு பாழாகி விடுகிறது. எதிரிகளின் இயக்கத்தை அறியும் ஆற்றலும் அழிந்து விடுகிறது. அவர்களுக்கு எதிரிகள் வேறு யாரும் இல்லை. அவர்களுக்குப் பகை அவர்களே தான் என்று ஆக்கிவிடுகிறதே என்றேன்.

ஆமாம். முகத்தின் கண் தோன்றுகிற மகிழ்ச்சி யையும், அகத்தின் கண் தோன்றுகிற உவகையையும் கோபம் அழித்து விடுவதுடன், திறத்துடன் சேர்ந்த செயல் எழுச்சியையும் கொன்று குலைத்து விடு கிறது, என்றார் வள்ளுவர்.