பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so? 8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஒருவன் கொள்ளுகின்ற கோபம் பொருளற்றது. வீணானது. தான் கொள்கின்ற கோபம், பிறரை எவ்வாறு துன்புறுத்தும் ? அவர்களை எவ்வாறு வருத்தும் ? இதையெல்லாம் கருத்தில் கொள்ளா மல், கோபப்படுகிறவன் எதிர்பார்க்கின்ற பயன்கள், அவனுக்கே தீங்காக அல்லவா திரும்பி வந்து விடுகிறது.

கோபம் கொண்ட ஒருவன், எதிரிலே உள்ள சுவற்றின் மீது கையால் அறைகிறான், குத்துகிறான். அதனால் என்ன பயன் ஏற்படுகிறது ? கையல்லவா துன்புறுகிறது- காயப்படுகிறது, ஆகவே கோபத் தைப் பொருளாக ஆர்வத்துடன் கொள்கிறவன், காயப்பட்டு கெடுவான். அது போலவே, விளை யாட் டிலும் கோபப்படுகிறவன், அவமானப்பட்டு கெடுவான்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு கிலத்தறைந்தான் கைபிழையா தற்று (307)

ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறுவேன்

கோபப்படுகிற யாரும், காரியத்தில் வெற்றி காண முடியாது. கோபப்படுகிறவன் அறிவற்ற வறிஞனாகி விடுகிறான். கோபப்படுகிறவன் திறமையிழந்த தீயனாகிப் போகிறான். அவன் இருக் கிற இடம் பகைவர் சிரிக்கிற இடிமாகப் போய் விடும் என்றெல்லாம் பாடினேன்.