பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 279

ஏன் அப்படிப் பாடினர்கள் ?

அங்கே தான் வாழ்க்கைத் தத்துவமே அடங்கிக் கிடக்கிறது. கோபப்படுகிற ஒருவன், உயிருடையவ னாக இருந்த போதிலும், அவன் இறந்தவனாகவே கருதப்படுகிறான். இறந்து போனவன் எப்படி வெல்லமுடியும்.

அப்படிப்பட்ட மோசமான குணங்களை வளர்த்து விடுகிற கோபத்தால், நாசமானவர்கள் நாட்டிலே நிறைய பேர்கள் உண்டு.

அதற்கு மாறாக ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருக் கிறேன். கேளுங்கள் என்றார்.

கோபத்தைத் துறந்தவர்களுடைய வாழ்விலும் இறப்பு வரும் என்றாலும், அந்த சமயத்திலும் அவர் களை அது வாழ்த்தும் வாழவைக்கும். அதாவது மரணத்தையே வெல்லுகின்ற மாபெரும் சக்தியைக் கொடுக்கும் என்று பாடியிருக்கிறேன்

இறந்தார் றந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை (310)

ஆகவே, கோபம் பாபம் என்பதாக இன்னும் நாங்கள் நினைக்கிறோம் இக்காலத்தில் விளை யாட்டுத் துறையில். பல புதிய அணுகு முறையைக் கையாளுகின்றார்கள். அதாவது, எதையும் கோபப் படாமல் ஏற்றுக் கொள்வதை ஆங்கிலத்திலே Temperament) GTsi sprt fr& 3i .