பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

மனோதத்துவ முறையில் உடலால் பதட் உத்தை நீக்கி (Tension), மனதால் அமைதிப்படுத்தி (Calm and Cool) விளையாடச் செய்யும் பயிற்சிகளை அளிக்கின்றார்கள். அதற்கு தியானம், இறைபக்தி என்கிற வழிகளிலெல்லாம் முயல்கிறார்கள் என்றேன்.

காலத்திற்கேற்ற கோலம், கோலத்திற்கே ற்ற கொள்கை, என்று சிரித்தார்.

ஆமாம் புதிய மொந்தை. பழைய கள் என்று. நானும் சிரித்தேன்.

அதற்கு மனப்பக்குவம் வேண்டும் என்றார். எப்படி என்றேன். வாருங்கள் பேசிக்கொண்டே போகலாம் என்றார், நடையைத் தொடர்ந்தோம்.