பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

விளையாட்டில் கேடு செய்கிற கீழ்மதி யாளனும், தான் செய்கிற தீச்செயலால், ஏற் கனவே இருக்கும் திறமைகளையும் இழந்து போகிறானே தவிர, தேர்ச்சி பெற்றவனாகிவிடி முடிவதில்லை. கள்ளம் கொண்ட மனது, தூர்க்க முடியாத பள்ளமாகவே மாறி விடுகிறது. அதனால் தான் நான் இப்படிப்பாடி வைத்தேன்.

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து (205)

தீய காரியங்கள் செய்கிற போது, உள்ள திறமைகள் எல்லாம் அழிந்து போவது மட்டுமல்ல. அந்தத் தீய செயலே தொடர்ந்து வந்து, அதாவது நீங்காத நிழலாகத் தொடர்ந்து வந்து அவனை அழித்துப் போடும் என்று ஆணித்தர மாகவே பாடியிருக்கிறேன்.

தீயவை செய்தார் கெடுதல் கிழல்தன்னை வியாது அடி உறைக் தற்று (208)

தீய செயலை ஏன் நிழலுக்கு ஒப்பிட்டுப் பாடினேன் ? நிழல் இருளில் மறைந்தும், ஒளியில் வெளிப்பட்டும் வரும், அதுபோல தீச்செயலானது செயல்படாத நேரத்து மறைந்தும், செயல்படுகிற போது நிறைந்தும் வெளியே வரும். ஆகவே. அது தொடர்ந்து தீயனைத் துன்புறுத்தும் என்று எச்சரித்துத் தான் பாடினேன்.