பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 285

பிறகு ஏன் இந்த மக்கள் உணர மறுக்கின் றார்கள் ? எங்கள் விளையாட்டு வீரர்கள் திரும்பத் திரும்ப ஏன் தவறு செய்கின்றார்கள் என்று என் மனக்குறையை வெளிப்படுத்தினேன்.

உண்மைதான். தீயசெயல்கள் தீயைவிட கொடியதாகும். அதனால் தான், தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றேன். தீய செயல் செய்வது எளி தாக இருக்கிறது. நல்ல செயல் செய்ய வலிமை யான மனம் வேண்டும். நல்ல மனம் வேண்டும்.

ஆனால், நமது வீரர்கள், முயற்சியில்லாமலே, உழைப்பு இல்லாமலே, எல்லா புகழையும் எளிதாகப் பெற்றுவிடி வேண்டும் என்று துடிக்கின்றார்கள். தீய செயல், பிறர்க்குக் கேடு விளைவிப்பது பாவ மான செயல் அல்ல என்றும் உண்மையாகவே நம்பு கின்றார்கள்.

பிறர்க்கு யார் கேடு செய்யமாட்டார்கள் என்றால், அவர்கள் பண்பாளர்கள் தாம். அவர்கள் எப்படி கேடுகளைத் தவிர்க்கின்றார்கள் தெரியுமா?

தம் உயிர்க்கு எந்தத் துன்பமும் வரக் கூடாது என்று எல்லோருமே விரும்புகின்றார்கள். ஆனா லும், மற்றவர்க்குக் கேடு செய்வது மகிழ்ச்சியானது என்றும் நினைக்கிறார்கள்.

தனது உயிர்க்குத் துன்பம் எப்படி வரக் கூடர்தோ, அப்படியே பிறர்க்கும் ஏற்ப_ என்று செயல்படுவது தான் பெருந்தன்மை.