பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பேராண்மை எனும் இந்தப் பண்பைத்தான், நான் அறிவினுள் எல்லாம் தலையாயது என்று பாடினேன்.

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் (203)

பிறர்க்குக் கேடு விளைவிக்கக் கூடிாது என்பது நல்ல குணம் என்றால், பிறர் தனக்குக் கேடு செய்த போதும், திருப்பிச் செய்யாத குணத்தை எப்படி கூறலாம் ? அவரே உலகிலே உயர்ந்த தெய்வ குணம் கொண்டவர் என்று கூறலாம் அல்லவா ?

பெருந்தன்மை உள்ளவர்கள் பிறர்க்குக் கேடு செய்யப் பயப்படுவது ஏன் என்றால், பிறருக்குக் காலையிலே துன்பம் செய்தால், அப்படிப் பட்ட துன்பம், தமக்கு மாலையிலே வந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்திருப்பதால் தான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும் (319)

கேடுகள் தானே வந்து சேரும். வீணே துன்பம் தரும், என்ற வாழ்வு நெறியைப் புரிந்து கொண்டி வர்கள், எப்போதும் யார் வம்புக்கும் போகவே மாட்டார்கள் என்று பேசிய போது, நான் இடை மறித்தேன்.

விளையாட்டுக்களில் மோதல்கள், முரட்டுத் தனமான இடிபிடிகள், தந்திரமான தாக்குதல்கள் எல்லாம் நிறைய உண்டு, இங்கே ஆத்திரப்பட்டு,