பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கீழ்மக்கள். கெட்டுப் போகும் பாழ்மக்கள் என்று சான்றோர்கள் கூறுகின்றார்கள்.

கடைசியாக ஒன்று. என்று வள்ளுவர் தீர்மான மாகப் பேசத் தொடங்கினார் .

தெரிந்து செய்கிறகேடு, எப்பொழுதும் கடுமை யான தண்டினைக்குரியது. அதனால் மறந்து கூட மற்றவர்களுக்குக் கேடு செய்யாதிருங்கள் என்று ம க் க ளு க் கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். மறந்தும் கேடு செய்கிற போதே, அறக் கடவுளானது அவர்களை அழித்து விடுகிறது என்றால், தெரிந்து கேடு செய்கிற போது, நேர் வதெல்லாம் நோகத்தான் செய்யும், சாகத் தான் செய்யும். இந்த உண்மைகளை உணர வேண்டும்

எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் என்ன ? என்று நான் இடை மறித்தேன்.

பண்பை வளர்க்கும் விளையாட்டில்; அன்பு, அருள், இரக்கம், அறிவு, ஆற்றல், ஆண்மை போன்ற அருங் குணங்களை செழித்தோங்கச் செய்யும் விளை யாட்டில், கேடு புரிந்து களிக்கின்றவர்கள், குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்ளும் கிறுக்கர்கள் ஆவார்கள். அவர்கள் சமுதாயத்தில் சண்டிாளர்கள் வீதியிலே நிற்கும் முள்மரங்கள், பாதையிலே பழுத்துத் தொங்கும் எட்டிக்காய்கள். உதவாத ஊருணியின் உப்பு நீர் போன்றவர்கள்.