பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இந்தச் சிந்தனையின் விளைவாக எழுந்த என் குறளைக் கேளுங்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50)

உலகத்திலே உண்மையிலே உறுதியாக, உழைப் பிலே என்றும் உண்மையானவராக, கொள்கையிலே குன்றாதவர்களாக வாழ்வாங்கு வாழ்கின்ற பண் பாளர்களை, தெய்வத்துக்கு இணையாக வைத்துப் போற்றப்படும். என் குறள் தரும் கொள்கை இது தான். என் வாழ்வு காட்டிய நெறியும் இவை தான் என்றார் வள்ளுவர்.

இப்படிப் பட்ட பண்பாளர்களை உரு வாக்குவது தான் என் எழுத்துப்பணி என்றேன்.

‘உங்கள் உள்ளம் புரிகிறது. உழைத்த உழைப் பின் மேன்மை புரிகிறது. ஒரு துறையில் ஒரு மன மாகி, உளம் சலியாது, உடல் நலியாது செய்து வருகிற உங்கள் தொண்டு காலம் காலமாக நிற்கும். மக்களை உயர்த்தும், வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவதில் தான் நான் பெருமிதம் கொள்கிறேன்’ என்று வாழ்த்தி, வருகிறேன் என்பது போல கை உயர்த்தி, கை அசைத்து விடை பெற்றுக் கொண்டார் வள்ளுவர்.

தூய அந்தத் திருவுருவம் கொஞ்சம் கொஞ்ச மாக மறைந்து கொண்டே வந்தது. என் கண்கள்