பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

விளையாட்டின் நோக்கமானது, மக்களை முழு மனிதர்களாக உருவாக்குவது என்றேன் நான்.

(( மனிதர்கள் என்றால், இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும் என்றார் வள்ளுவர்.

உட்லால், மனதால், ஆன்மாவால் உயர்ந்து, சிறந்து விளங்கும் தன்மையுடையவர்களையே, முழு மனிதர்கள் என்று அழைக்கிறோம் என்று சிறிய விளக்கம் தந்தேன்.

விளையாட்டைப் பற்றி நான் கூறாமல் விட வில்லையே என்று நான் கூறினேன் அல்லவா 2 நாட்டில், சமுதாயத்தில் முழு மனிதர்களை உரு வாக்கும் ஒப்பற்ற வழிகளைத்தானே நானும் குறளாகக் கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் சற்று உன்னிப்பாகப் பாக்களைப் படித்தால் தெரியும். மனிதர்களின் மாண்புக்காகத் தானே பாடல்களை யாத்திருக்கிறேன். எங்கள் காலத்து வாழ்க்கை நிலையை, நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு வாழ்க் கையே விளையாட்டாக இருந்தது. விளையாட்டே வாழ்க்கையாக இருந்தது.

அது என்ன வாழ்க்கை தெரியுமா ? அரச வாழ்க்கை. அரசியல் வாழ்க்கை. அன்றாட செயல்களைத் திறம்பட நடத்தும் ஆற்றல் மிகு

வாழ்க்கை. -