பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இருந்தது. அவர்கள் மிருகங்களின் பசிக்கு விருந் தான காலம் அது.

அல்லலும் அனுபவங்களும். அவர்களுக்கு ஆற்றலை அளித்தபோது, ஆவசேத்துடன் வந்த மிருகங்களுக்கு அஞ்சாமல், எதிர்த்தார்கள். சண்டையிட்டார்கள். கொன்றார்கள். அவற்றின் தசைகளை உண்டார்கள். அப்படியாக அவர்கள் மிருகங்களை ஆளத்தலைப்படுகிற அதிக ஆற்றல் மிக்கவர்களாக வாழ்ந்து சென்றார்கள்.

மரப்பொந்துகளும், புதர்களும். குகைகளும் அவர்களுக்கு ஒதுங்கும் இடமாக, உறங்கும் வீடாக இருந்த நிலை மாறியது. ஆடையின்றி அலைந்த அவலம் நீங்கியது, ஒரிடத்தில் ஒன்று சேர்ந்து இருக்க, வீடுகள் அமைத்துக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டார்கள். தாங்கள் தப்பித்துக் கொண்டு பிழைத்த தந்திரங்களைக் கற்றுத் தந்தனர். திறமைகளை வளர்த்து விட்டனர்.

அதாவது தப்பி ஓடுகிற, தாண்டிக் குதிக் கிற, மரம் ஏறிப் பிழைக்கிற, கல்லெறிந்து அடிக் கிற, நீந்திச் சென்று மறைகிற போன்ற திறமை களையெல்லாம் பெரியவர்கள் தங்களிடம் வளர்த் துக் கொண்டனர். தங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தனர். அவர்களுக்குரிய வாழ்க்கையோ விளையாட்டுத் திறமைகளை வாயார வாழ்த்தி வரவேற்கும் காலமாக இருந்தது.