பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jo 2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கோயிலாக மாறியது. மக்கள் உடல், மன்னன் உயிர் என்ற மாண்பு வழி, உயிர் பெற்றது.

தலைவன் அரசனாகிவிட்டான். அரசு புரியும் பூமி நாடாகிவிட்டது. அரசன் வழியே மக்கள் வழி. அதுவே வாழும்வழி என்று ஆயிற்று.

இப்படியாக என்று நான் பேசிக்கொண் டிருக்கும் பொழுது கையசைத்தார் வள்ளுவர். அவர் கண்களில் குறும்பான பார்வை ஒன்று பரபரத்து நின்றது. மெதுவாகப் புன்னகைத்தார்.

நீங்கள் கூறிய காலகட்டம்தான் நான் வாழ்ந்த காலம். அந்தக்காலம் தமிழர்களின் நற்காலமாக, பொற்காலமாகத் திகழ்ந்த நாகரிகக் காலம்.

பேசுகிற மொழியில் செழுமை. செய்கிற செயல்களில் முழுமை. மக்கள் உடலெங்கும் வளமை. மண்ணை மாதாவாகப் போற்றிய பெருமை. முகிழ்த்து விளையாடிய திறமை.

இப்படிப்பட்டக் காலக் கட்டத்தில்தான், என் வாழ்வும் இடம் பெற்றிருந்தது. மலர்தலை உலகம் மன்னரைச் சார்ந்தே பெருமை பெற்றது. மக்கள் மன்னருக்காகத் தங்கள் வாழ்வையே தரத் தயாரா யிருந்தனர். தங்கள் நாட்டைக்காக்க, அன்னியர் களுடன் போரிடும் வண்ணம், தங்கள் உடலைத் தயார் செய்திருந்தனர். போரிடுகிற வாய்ப்புக்