பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 35

மரம் போன்ற மக்களும் உண்டு என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவே நான் முயன்றேன் என்றார்.

அந்த மக்களை மக்கள் என்று அழைக்காமல், குடி என்று நீங்கள் அழைத்துப் பாடியிருக்கின் lர்கள். குடி என்றால் குடிமக்கள் என்பதான உங்கள் காலத்துப் பொருள், இன்று எப்படி மாறிப் போய் இருக்கிறது தெரியுமா என்றேன்!

எப்படி மாறிப் போயிற்று?

குடி என்றீர்கள். உங்கள் வாக்கை, தெய்வ வாக்காக எங்காலத்து மக்கள் ஏற்றுக் கொண்டு. குடிக்கும் மக்களாக ஆகிவிட்டார்கள். குடி உயரக் கோன் உயரும் என்றீர்கள் நீங்கள். குடி உயர உயர, எங்கள் அரசுக்கும் அதிக வருமானம் வரத் தொடங்கி, அரசே உயர்ந்து விட்டது.

குடிக்காத மக்களை, படிக்காத மக்கள் போல

இழிவுபடுத்தப்படுகிற ஒரு சமுதாய நிலையே இன்று இந்த நாட்டில் உண்டாகிவிட்டது என்றேன்.

அப்படியா அந்தச் சொல்லுக்குப் பொருள் இருந்தது?

ஆமாம். நீங்கள் குடி என்று ஒரு முறை

கூறியிருந்தால் மக்கள் மறந்திருப்பார்கள். நீங்களோ 27 முறை கூறியிருக்கின்றீர்கள். ஆகவே