பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அந்தக் குடி சரிதான் என்று எண்ணி, மனதுக்கு நல்ல சமாதானமாக அமைத்துக் கொண்டு, குடிப் பழக்கத்தில் குடி கொண்டு விட்டார்கள் என்றேன்.

என் சொல்லுக்கு இப்படி ஒரு நிலையா? நான் சான்றோர் என்று கூறியிருக்கிறேனே! அதை அவர்கள் அறியவில்லையா? என்று சங்கடப்பட்டார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் (69)

இப்படிப் பாடியதற்கு என்ன பொருள் என்று அவர்களுக்கு விளங்கவில்லையா என்று பெரு மூச்சுடன் கூறியதைப் புரிந்து கொண்டு, அவர் முகத்தையே பார்த்தேன். அதற்கு அவர் விளக்கம் அளிக்கத் தயாராக இருந்தார். சான்றோன் என்றால் என்ன என்று என் மனதுக்குள் பல நினைவுகள் தோன்றி அலைபாய்ந்தன.