பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தக்கார் தகவிலார்

ஒரு தாய், தன் மகனை சான்றோன் எனப் பலரும் புகழ்வதைக் கேட்கும் பொழுது, பெரு மகிழ்ச்சி அடைகிறாள். அப்படியென்றால், என்ன பொருள்?

வள்ளுவர் இவ்வாறு வினவியபடி, என் முகத்தைப் பார்த்தார், சான்றோன் என்றால், அறிவுள்ளவன், அறிஞன் என்பது பொருளாகும் என்றபடி, அவரைப் பார்த்தேன்.

அப்படித் தான் பலரும் கருதுகின்றனர். ஆனால், நான் கூறிய சான்றோன் எனும் சொல்லுக்கு, வேறு பல நிலையும் உண்டு.