பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 3 go

ஒரு நாட்டிற்கு அழகும் பெருமையும் விளைச்சலும், செல்வமும் மட்டுமல்ல. அதை அனுபவிக்கின்ற, ஆட்சி செய்கின்ற, அறிவும்: ஆண்மையும் உள்ள மக்கள் தாம். அதனால் தான் பிணியின்மை என்று பெருமையேற்றிக் கூறினேன்.

உடல் அழகும், மன அழகும், பண்பழகும் அன்பழகும் மிகுந்த மக்கள், பிணியில்லாத இனிய நிலையில் வாழ்வதைத் தான் தக்க நிலை என்றேன். அவர்களையே தக்கார் என்றும் அழைத்தேன்.

ஒரு நாட்டு மக்களை நான் இந்த முறையில் தான், இரண்டு பிரிவாகப் பிரித்துக் காட்டினேன்

எப்படி? இந்தக் குறளைப் படியுங்கள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் (114)

இவர்கள் நாட்டுக்குத் தகுந்தவர்கள், தகுதி யில்லாதவர்கள் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுகிறேன். அவர்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும்.

தந்தையும் தாயும் வலிமையுள்ளவர்களாக, வளம் சார்ந்த பண்புள்ளவர்களாக இருந்தால் தான், அவர்கள் தோற்றுவிக்கும் குழந்தைச் செல்வங்களும் செழுமையுடன் விளங்கும். தக்கா ராக இருந்தால் தானே, தக்கதான குழந்தைகள்