பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய்ர்

பிறக்கும்? நோயாளிகளுக்குப் பிறக்கும் குழந்தை கள் நோஞ்சான்களாகத் தானே இருக்க முடியும்.’

அவ்வாறு உடல் ஊனத்தோடும் உயிர்ப் பிண்டத்தோடும்பிறக்கும் குழந்தைகளை, வாளால் வெட்டி வீழ்த்தி எறிவது தமிழர் மரபாக இருந்து வந்தது என்றார் வள்ளுவர். - -

நமது தமிழ் மண்ணின் இந்த இனிய வாழ்க் கையை நீங்கள் இலக்கியமாக்கியிருக்கிறீர்கள். கிரேக்க மக்களோ நல்ல சரித்திரமாக்கி வைத்துச் சென்றிருக்கின்றார்கள் என்றேன் நான்.

கிரேக்கர்கள் என்றால், என்று கேட்ட வள்ளு வரின் இருபுருவங்களும், சற்று மேலேறி இறங்கி வந்தன. - * :

தமிழர்களைப் போலவே, தக்கார்களை வளர்த்து வந்த நாடு அது. ஆனால், வரலாறு எழுதும் வழக்கமுள்ள அவர்கள், தாங்கள் வாழ்ந்ததை எல்லாம் பூமியில் பெரும் பெயர் பெற்றுக் கொள்ளச் செய்து விட்டனர். தமிழர்களின் வாழ்க்கை சிறப்புக்களெல்லாம், எழுதி வைக்காத காரணத்தால், தண்ணிர்மேல் எழுத்தாக மறைந்து போயின. *

கிரேக்கர்கள் அப்படி என்ன தான் செய்தார் கள் என்று மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார்.