பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்ே டாக்டர். எஸ். நவராஜ் செல்லையர்

தக்கார்கள்தாம், நாட்டுக்குத் தேவையானவர் கள். அப்படி உள்ளவர்களால் தான் நாடு வாழ் கிறது. நாடும் வீடும் பெருமையும் புகழும் பெற்று மேலோங்குகிறது. அதனால்தான் விளைச்சலை ஒரு கரையாக்கி, செல்வத்தை மறுபுறம் வைத்து, நட்ட நடுவிலே தக்காரை வைத்தேன்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (212)

வேளாண்மை என்றால் இங்கே உதவி என்று பொருள். தொழிலால் மற்றும் நல்ல செயல்களால் ஈட்டிய பொருள்களை யெல்லாம், தக்காரிடத்தில் தந்து உதவவேண்டும். அது தான் உண்மையான வாழ்க்கை. உத்தமமான வாழ்க்கை என்றெல்லாம் கூறினேன் என்றார்.

அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவரது விழி களில் வீசிய ஒளிவெள்ளம், அன்றைய தமிழர்களின் அறிவியல் ஆண்மையில் பெற்ற பெருமிதத்தை, ஒளி பரப்பிக்கொண்டிருந்தது.

தக்கார்கள் தாம் எல்லோரையும் ஆண்டிருக் கின்றார்கள். அவர்களைச் சுற்றியே வாழ்க்கை முறை, சுற்றிச் சுழன்று ஓடிக் கொண்டிருந்தது.

மனதாலும் உடலாலும் வலிமையுடன் தக்கா ராக வாழ்ந்தவர்கள் எல்லோரும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விரிந்த பண்போடு, திறந்த இதயத்தோடு வாழ்ந்தார்கள். அப்படி உலக நடை