பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மக்களும் மண்பும்

வள்ளுவரிடமிருந்து வார்த்தைகள், வளமான அருவியின் அழகான துள்ளலாக வீழ்ந்து கொண்டே இருந்தன. நானும் கேட்டுக் கேட்டு வியந்தவாறு அமர்ந்திருந்தேன். -

உடலால், மனதால், பண்பால், செயலால் உயர்ந்த முழு மனிதர்களையே நான் தக்கார் என்றேன். அத்தகைய தன்மைகளும் தகுதிகளும் இல்லாதவர்களை நான் தகவிலார் என்றேன். இப் படியாக நான் மக்களை பலவாறு, பலப்பட, பல் வேறுவிதமாகப் பிரித்துப் பாடியிருக்கிறேன். படித் தீர்களா என்றார்.

உங்கள் நூலை அதனால் தான். வாழ்க்கை நூல் என்று கூறுகிறார்களோ என்றேன்.

மெதுவாக சிரித்துக் கொண்டார்.