பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் என்று இந்த நூலுக்குப் பெயரிட்டிருக்கிறேன்.

வள்ளுவருக்கும் விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பவர்கள் அநேகம். வினா எழுப்புபவர்கள் ஆயிரம் விதண்டாவாதம் செய்து, வெறுத்துப் பேசுவோரும் பல்லாயிரம் இருப்பர்.

எனக்கு இப்படிப்பட்ட நினைவுகளும், நிலைமைகளும், நிர்ப்பந்தங்களும், ஏற்படும் என்று தெரியும். அதனால் தான் சற்று விவரமாக, ஒரு விளக்கத்தை முன்னதாகவே தந்து விட்டால், விருப்பத்தோடு இந்த நூலைப் படிப்பீர்கள் என்று தொடங்குகிறேன்.

வள்ளுவர் என்றதும் ஜடாமுடியோடு, பட்டை தீட்டிய நெற்றியோடு, பூனூல் அணிந்த திறந்த மேனியோடு, நமக்கு முன்னாளில் அறிமுகப்படுத்தினார்கள் ஒவியர்கள்.

இப்போது, அரசே ஒரு திருவுருவத்தைத் தீட்டி, ஒர் அற்புதக் காட்சியை நமக்குக் கொடுத்திருக்கிறது.

வள்ளுவர் என்றால் மதவாதி, சீர்திருத்தச் செம்மல், சிந்தனைச் சிற்பி, தர்மநெறி காட்டிய தகைமையாளர் என்று தான் நமக்குக் கற்பித்திருக்கின்றார்கள்.

மதவாதிகள் அனைவரும், எங்கள் மதக் கருத்துக்களை, பாங்காக வருணித்திருக்கும் விதத்தாலே, எங்களவர்” ஆகி விட்டார் என்று ஏற்றுப் போற்றிக் கொண்டதற்கு, வள்ளுவர் பற்றி வந்திருக்கும் பல்வேறு நூல்களே சாட்சி யங்களாகின்றன.