பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s) டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இயற்கைக்கு என்றும் சீரான இயக்கம் உண்டு. செப்பமான நடைமுறை உண்டு. மாறாத வழக்கம் உண்டு. அவற்றில் இதமான வேகம் உண்டு. அதனால்தான் அவைகள் அறிவுடையோரால், அற்புதமாகப் பாராட்டப்படுகின்றன.

நீர், நெருப்பு, காற்று, ஒலி, ஒளி எல்லாம் நீங்கள் அறிந்தது தானே. அவற்றின் வேகத்தைப் பாருங்கள்.

நீராக இருந்து வெள்ளமாகிப் போகிற புனலின் வேகம். அந்த வேகத்தை மிஞ்சுகிறது நெருப்பின் வேகம். நெருப்பின் வேகத்தைவிட, காற்றின் வேகம் கடுமை. காற்றின் வேகத்தைவிட ஒலியின் வேகம் அதிகம். ஒலியை விட, உள்ளத்தில் தோன்றும் நினைவுகள் வேகம், ஈடற்றது, இணையற்றது.

நெஞ்சின் நினைவை விட உயிரின் வேகம் பெரிது என்பர் பெரியோர்கள்.

அவ்வளவு ஆற்றல் வாய்ந்த அறிவு பெற்ா மனிதர்கள், அருமையாக வாழ வேண்டும் என்பது தான் என் நோக்கம். அப்படி வழி காட்டும் இயற்கையான உண்மைகளைக் கொண்டே, உலகைப் பார்த்தேன். குறளை யாத்தேன்.

நான் விளையாட்டு பற்றியல்லவா உங்களைக் கேட்டேன். நீங்கள் மக்களைப் பற்றிப் பேசினர்கள் என்று நான் இடைமறித்தேன்.