பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஏற்படும். பல விதமான இன்னல்கள் ஏற்பட ஏதுவாக இருப்பதால், விளையாட்டுப் பக்கமே போகக் கூடாது என்று பலர் குழந்தைகளைத் தடுத்து விடுகின்றார்கள்.

பிறகு என்றார் வள்ளுவர்.

வினை என்ற சொல்லுக்குத் தொழில் என்று ஒரு பொருள் உண்டு. இதை சங்க காலத்து மக்கள் சிந்தைமேற் கொண்டு செயல்பட்டார்கள் என்றேன்.

அது எப்படி உங்களால் கூற முடிகிறது. என்றார்.

சங்க காலத்தில் புலவர்கள் பலர் வாழ்ந்திருக் கின்றனர். அவர்கள் விளையாட்டைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பது அவர் களின் பெயர்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது. கடுவன் இளமள்ளனார், கடுவன் மள்ளனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், என நான்கு பெயர்கள், சங்க காலப் புலவர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கின்றன.

இவர்கள் மள்ளர் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வறிஞர்கள் கூறியிருக்கின்றனர். (ஆதாரம் :- டாக்டர் அ. பிச்சை எழுதிய தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் என்ற நூல்.)