பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 55

தமிழகத்தில் அந்நாளில் மல்யுத்தம் அதாவது ஒருவரோடு ஒருவர் கட்டிப் பிடித்துச் செய்கிற கடும் யுத்தம் அதிகமாக இடம் பெற்றிருந்ததாக வர லாறு மூலம் அறிய முடிகிறது என்றேன்.

வள்ளுவர் அதற்குரிய விளக்கம் சொல்வதற்கு ஆய்த்தமானார். - - நான் எழுதிய 133 அதிகாரங்களிலே, நான்கு

அதிகாரங்களுக்கு வினை எனும் சொல் வருவது போல தலைப்புகள் தந்திருக்கிறேன்.

1. தெரிந்து வினையாடல் (52)

2. வினைத் தூய்மை (66)

3. வினைத் திட்பம் (67)

4. வினை செயல் வகை (68)

வினை எனும் சொல்லுக்கு செய்யும் செய லானது பின்னாளில் பெருகி, பயன் கொடுக்க வரும் நிலை என்று நான் முன்னரே விளக்கினேன்.

அவற்றிலே ஒரு குறிப்பிருக்கிறது. அதையும் கூறுகிறேன். தெரிந்து வினையாடல் என்றேன். வினைத்துாய்மை, வினைத்திட்பம், வினை செயல் ஆiகை என்றேன்.