பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தெரிந்து செயல்படுதல் என்றது: எந்த செயலி லும் தூய்மையும், திண்மையும் இருக்க வேண்டும். அதற்கேற்ப செயல்படும் முறைகளும் இருந்தாக வேண்டும் என்றும் பாடினேன்.

வினைத்துய்மை என்றது செய்யும் செயலில் பாவமும் பழியும் இல்லாமல் இருக்க வேண்டும். வினைத்திட்பம் என்றது செய்யும் செயலில் மனத் திண்மை நிறைந்திருக்க வேண்டும். வினை செயல் வகை என்றது. பல்வேறு முறை உள்ளது என்றேன்.

நான் கூறிய வினையாடல் என்ற சொல்லும், நீங்கள் கூறுகிற விளையாடல் என்ற சொல்லும்

எவ்வாறு ஒன்றி வருகிறது என்பதைப் பாருங்கள்.

வினையாடல் என்பது செயல்படுதல், செம்மை

யாகச் செய்தல் அது போலவே, விளையாடல் என்பது விளைந்த, கனிந்த செயல் திண்மைகள் என்றும் பொருள் தருகிறது.

தொல்காப்பியர் அவர்களும் உலகில் இன்பம் தரத்தக்கவற்றில் தலையாயது நான்கு என்றும், அவை இன்பம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று கூறியிருக்கிறார்.

விளையாட்டு மனித குலத்துடன் பிறந்து வளர்ந்து வந்த இன்பமான செயல் முறைகள் என்பதை எல்லா காலத்திலும் வாழ்ந்த மக்கள்