பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளயாட்டுச் சிந்தனைகள் 57

உணர்ந்து, அவரவர்கள் அவரவருக் கேற்ற ஆசைப் பெருக்குடன், ஆடி மகிழ்ந்து விட்டுப் போயிருக்

கின்றார்கள்.

நான் வாழ்ந்த காலத்தில், விளையாட்டு என்பது தனியான ஒரு செயலாக இல்லாமற் போனது. என் காலத்து வாழ்க்கை முறைகளால், எங்கள் குழந்தைகள் தாம் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால், வயது வந்த மக்களோ, வீர விளை யாட்டுக்களில் தான், அதிகக் கவனம் செலுத்தி னார்கள்.

திண்மையான உடம்பை வைத்துக் கொள் வதும், காப்பாற்றிக் கொள்வதும் உண்மையான வாழ்க்கை என்றே நம்பினர்.

எங்கள் வாழ்க்கை, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. அதனால் வீர வாழ்க்கையாகவே விளங்கி வந்தது. எம் காலத்து மக்களுக்குப் புகழும் வீரமும் இரண்டு கண்களாக விளங்கின.

எந்நாளும் வாழ்க்கையை போராட்டம் என்று கருதாமல், பிறருடன் புரிகிற போர் ஆட்டமாகவே அவர்கள் கருதித், தங்களைத் தயார் செய்து கொண்டனர்.

பெற்றோர்களின் 5L6q)L0 பலமுள்ள மக்களைப் பெற்றுத் தருவது. கொல்லர்களின்

வள்ளுவ-4