பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இந்தப் புருவம் நெறிக்கும் சிந்தனைக்கிடையே, புதுக் கரடி ஒன்றை நான் விட்டிருக்கிறேன்.

எப்படியென்றால், வள்ளுவர் கூறிய குறட்பாக்கள் எல்லாம், விளையாட்டுத் துறைக்கான கருத்துக்களே என்பது தான்.

எப்படி இந்த முடிவுக்குவர முடிந்தது ?

வள்ளுவரின் வாழ்க்கை பற்றி, முழுமையான வரலாறு எதுவும் இல்லை. அதனால், எழுத முனைந்த எழுத்தாளர் எல்லோரும், தங்களது இனிய கற்பனைகளை அவரவர் அறிவுக்கேற்ப அவிழ்த்து விட்டு, ஆறுதல் பெற்றுக் கொண் L-657IT.

ஆனால், எனக்கு திருவள்ளுவ மாலை தான், ஒரு புதிய வழியைத் திறந்து காட்டியது. அதில் உள்ள இரண்டு வெண் பாக்கள், நன்பாக்களாக எனக்கு வழிகாட்டி, விழி திறக்க வைத் தன.

‘தப்பா முதற்பாவால் தாமாண்ட பாடலினால் முப்பாலில் நாற்பால் மொழிந்தவர்-எப்பாலும் வை வைத்தக் கூர்வேல் வழுதி மனமகிழ்த் தெய்வத் திருவள்ளுவர்.

இது திருவள்ளுவ மாலையில் உள்ள 19வது பாடல் கீரந்தையார் எனும் பெரும் புலவர் பாடியது.

அறனறிந்தேம் ஆன்ற பொருள் தெரிந்தேம் இன்பின் திறனறிந்தேம் விடுதெளிந்தேம் மான் எறிந்த வாளார் நெடுமாறன் வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு

திருவள்ளுவ மாலையில் உள்ள 50வது பாடல், கொடி ஞாழன் மாணிபூதனார் என்னும் புலவர் பாடியது.