பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& டாக்டர் எஸ். நவராஜ் செல்லைய

கடமை வேல் வடித்துத் தருவது. வேந்தருக்கு: கடமை நன்னடை நல்குவது.

வேந்தர்களின் நிழலிலே வாழ்ந்த மக்கள் வேந்தர்களின் விருப்பத்திற்கேற்ப, வீரமக்களாகவே வாழத் தலைப்பட்டனர். அதனால், அவர்கள் போர் மறவர்களாகவே திகழ்ந்தனர்.

உறுதி வாய்ந்த உரமான உடல்; உலக வாழ்வை உண்மையாக வாழ்கின்ற வளம் தரும் ஒழுக்கம் வாய்ந்த உள்ளம்; தாய் நாட்டுக்காகத் தங்கள் உயிரையும் தர முனைகின்ற நாட்டுப்பற்று நிறைந்த வேகம்.

இப்படித்தான் எங்கள் மக்களின் வாழ்க்கை, போர் வாழ்க்கையாக இருந்து வந்தது.

“தம்மை ஆள்கின்ற வேந்தன், தமக்கு நிறைய உதவிகளைச் செய்து காத்தவன். அத்தகைய, ஆண்டகையான அரசன், கண்ணிரோடு கலங்கும் வகையில், போரிலே வீர மரணம் அடைவதே பெரும் பேறு’ என்று எங்கால மக்கள் எண்ணினர். அப்படிப்பட்ட அரிய நிலையை, இறந்தாவது பெற வேண்டும் என்ற எழுச்சியுடனே மக்கள் போரில் ஈடு பட்டனர்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு இரத்து கோட்டக்க துடைத்து (780)