பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (412)

சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று பாடியது ஏன் ? உங்களுக்கும் வியப்பாக இருக்கிறதல்லவா என்றார்!

ஆமாம்! உங்கள் இந்தக் கருத்தை, இக்கால விஞ்ஞான வவ்லுநர்கள் எவ்வளவு அருமையாக விளக்கித் தந்திதிருக்கிறார்கள் என்ற வியப்பில் தான் நான் இருக்கிறேன் என்றேன்.

நம் தமிழகத்தைப் போலவே சீனதேசம் என்றும் ஒன்று இருக்கிறது. அவர்கள் நம்மைப் போலவே அக்காலத்திலிருந்து அறிவிலும் வீரத்திலும், பண்பிலும் மேம்பட்டவர்களாகவே வாழ்ந்துச் சென்றிருக்கின்றார்கள். உங்களைப் போல உடல் பற்றியும், வாழ்க்கை பற்றியும் நிறைய உரைத்திருக்கிறார்கள்.

உங்கள் உணவுக்கொள்கை போலவே, அவர்கள் நாட்டுப் பழமொழியும் ஒன்று இருக்கிறது

“கொஞ்சம் சாப்பிடுங்கள். நிறைய சாப்பிட லாம்’ என்பதுதான் அது என்றேன்!

அப்படியா! சிறிது விளக்கமாகக் கூறுங்கள் என்றார்! நான் விளக்கம் கூற ஆரம்பித்தேன்.