பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

விழுந்துக் கிடந்தது. அவர் என்னைப் பார்த்தார் விவரம் புரியாமல்.

இதை நாங்கள் சரக்குப் பேருந்து என்று கூறுவோம். உங்கள் காலத்தில் வண்டி இருந்தது. எங்கள் நாகரிகக் காலத்தின் முன்னேற்றக் கண்டு பிடிப்பு இது என்றேன். பெயர் லாரி என்றேன்.

அந்த லாரி வந்த வேகத்தில், குறுக்கே வந்த மாட்டு வண்டிக்காக, பிரேக் போட்டு நிறுத்தப் போய், வண்டியின் மீது மோதி, சரக்கு லாரி சரிந்து சாய்த்தது.

மாட்டு வண்டியும் சேதமடைந்து போனது. லாரியில் வைத்திருந்த ஒரு சக்கரம் தான், கீழே விழுந்து, உருண்டோடிவந்து, சிற்றுண்டி வண்டியை மோதிச் சாய்ந்தது.

இந்த விபத்தில் கால் ஒடிந்து போன ஒரு கிழட்டு மாடு, மேற்கொண்ட பயம் காரணமாக, மிரண்டு கூட்டத்திற்குள் ஒடியது. நொண்டி மாட்டைக் கண்டு பயந்து, அந்தக் கும்பல் ஓடிய காட்சிகள், போட்ட சத்தங்கள், எல்லாவற்றையும் கண்ட வள்ளுவரின் முகம், வருத்தம் கலந்த புன் சிரிப்புக்கு ஆட்பட்டது. -

அவரது முகத்தைப் பார்த்ததும், அவர் சுவை யாக ஒரு பாட்டைச் சொல்ல ஆரம்பித்தார்.