பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் “ . . 73

பீலியெய் சாகாடு அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். (475)

மெல்லியதான மயில் இறகை. மிகுதியாக, வண்டியில் ஏற்றினால், அந்த வண்டி கூட பாரம் தாங்காமல் அச்சு இற்றுப் போய் வீழ்ந்து படும். இந்தப் பாடல் வரி, இன்றைக்கும் என் கண் முன்னால் உண்மை என்று சான்று காட்டுகிறதே! என்றார் வள்ளுவர்.

இப்படியா பண்டங்களை ஏற்றிக் கொண்டு

வருவது! அறிவற்றத்தனம் என்றும் அவர் அலுத் துக் கொண்டார்.

நீங்கள் வண்டிக்கு ஒரு பெயராக சாகாடு என்று சொல்லியிருக்கின்றீர்கள். இப்பொழுது. அவை சாக்காட்டுக்கு மக்களை அனுப்புகின்ற சாதனமாகப் போயிருக்கிறது பார்த்தீர்களா ? என்று நான் அவருக்கு சாமாதானம் கூறினேன்.

அதைக் கூட நான் பெரிது படுத்தவில்லை. காலொடிந்த மாடு ஒன்று, வற்றலாகிப் பாவ மாகப் போய்விட்ட அந்த கிழட்டு மாடு ஒன்று ஒடுகிறது. அதைப் பார்த்து அந்தக் கூட்டத்தில் நின்ற மக்கள் கலைந்து ஒடிய அச்சத்தைப் பார்த்தே, எனக்குப் பொறி தட்டியது போன்றாகி, விட்டது. -

வள்ளுவர்-5