பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

காளை மாட்டை அடிக்கி, கன்னியைக் கைப் பற்றி, கடிமணம் புரிந்த கன்னித் தமிழ் நாட்டு இளைஞர்கள் என்று புகழ்பெற்றது தமிழினம். எம் காலத்தில் துள்ளித் தாண்டி, தொட்டவர்களைத் தூக்கியெறிந்து, கொம்பால் துளைத்துவிடும் காளைகளை அடக்கிய என் கால மக்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நம் தமிழகத்து மக்கள், உடல் வலிமை குறைந்து போய் கிடக்கின்றார்களா என்பது தான் எனக்குப் புரியவில்லை. வீர மக்கள் என்ற தமிழ் இனத்தின் மேன்மைப் பெயர் சொல்லிக் கொண்டு பொய்ம்மை வாழ்க்கை வாழ்கின்றார்களா இக் காலத்து மக்கள் என்றார் வள்ளுவர்.

வலியின் கிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று. (273)

பசு ஒன்று, தான் கண்டார் பயப்படுகிற தோற்றம் கொள்ள வேண்டும் என்று யோசித்து, கடைசியில், புலித்தோல் ஒன்றைப் போர்த்திக் கொண்டு வயற் காட்டில் மேய்ந்தது என்று அன்று நான் எழுதியிருந்தேன்.

இன்று பார்க்கிறேன்! வலிமையற்ற மக்கள், அச்சம் கொண்டு பயந்தோடுகிற மக்கள், இன்று வலிமையுள்ளவர்களாகப் பொய் வேடம் போட்டுப் பிழைக்கின்றார்கள். இவர்களின் வான் உயர்