பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வழி ஆட்பட்டால், புறமும் தரம் குன்றிப் போகும் என்றார், அப்படிப்பட்ட ஆட்களைத் தான் இப்பொழுது பார்க்கிறோம் என்றார்.

வலிவில்லாத மக்கள் மீது வள்ளுவர் கொண்ட எண்ணம், வடுப்பாகத் தெரிந்தது. அவர் விளக்கம் இன்னும் கொஞ்சம் கடுமையாகவே எழுந்து வந்தது.

புறங் குன்றி கண்டனைய ரேனும் அகம் குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. (277)

குன்றிமணியானது சிவப்பாகக் காட்சி யளித்தாலும், அதன் ஒரு புறம் உள்ள கறுப்பானது, அதன் உண்மை உருவத்திற்கு மாசுக்கற்பித்தாற் போல தோன்றுகிறதே! கறுப்பு அதன் களங்கம் என்றார். o

குன்றிமணியின் சிவப்பு மனிதர்களின் வீரம். அதில் உள்ள கருப்பு . மனிதர்களின் பயங்கொண்ட மனம். மன வலிமையற்றவர்கள் புறவலிமையிலும் அடங்கிப்போய், பொய்மை வாழ்வு தான் வாழ் வார்கள் என்றார்.

- இன்றைய வாழ்க்கை முறை அப்படி ஆகிவிட்டது. மக்களையும் ஆக்கிவிட்டது என்று நான் சமாதானம் கூறினேன். - -