பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 77

எப்படி என்றார் வள்ளுவர்.

உங்கள் காலத்து வாழ்க்கை, வீரமும் அறமும் சிறந்து விளங்கிய காலமாக இருந்தது. போர்ப் பயிற்சிகளே சீர்ப் பயிற்சிகளாக மக்களிடையே செழித்தோங்கியிருந்தன. அன்று போரில்லாத வீரர், வேரில்லாத மரம், சீரில்லாத உடல் போன்றது என்று சிறப்பாகப் பேசப்பட்ட காலம் அது.

வலிமையாக உடலைக் காப்பதே வரம் பெற்ற வாழ்க்கை என்ற கருத்து, மக்களிடையே அன்று மிகுந்திருந்ததால், மக்கள் வலிமையோடு வாழ உழைத்தனர். -

உடலை உருவாக்கினர், வளமேற்றினர்.

ஆனால் இப்பொழுது, உழைப்பதை மக்கள் கேவலமாகக் கருதுகின்றனர். சோம்பலே சொகு சான வாழ்க்கை. அதுவே நாகரிகத்தின் சின்னம் என்று தாங்களும் வாழ்ந்து, மற்றவர்களையும் நம்பவைக்கின்றனர்.

உழைப்பின்றி, உயர்ந்த உடை உடுத்தி, உல்லாசமாக வாழ்வதே உன்னதமான வாழ்வு என்று, வாழ்க்கைமுறைக்கு வரம்பு கட்டுகின்றனர். மற்றவர்கள் உழைப்பின் பயனை அனுபவிப்பதே அறிவுடையவர்கள் செயல் என்பதாகவும் மக்கள் பேசி, பின் பற்றி வாழத் தொடங்கினர். இதனாலே