பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

போரிலே உள்ள வீரதீர நிகழ்ச்சிகளான குதிரை யேற்றம், யானையேற்றம், குத்துச்சண்டை, மல்யுத்தம், கத்திச் சண்டை, கனமான பொருள் தூக்கி எறிதல். தாண்டுதல், எறிதல், ஒடுதல், போன்றவை எல்லாம் இன்று போட்டியிடும் விளையாட்டுகளாக வந்திருக்கின்றனவே !

போர் நிகழ்ச்சிகளும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் அமைப்பில், எதிர்பார்ப்பில் ஒன்றாகத் தான் இருக்கின்றன. செயல் முறைகளில் கொஞ்சம் வண்மை, திண்மை என்றாலும், வெற்றி பெறுவது என்பது, தான் முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது.

விளையாட்டுக்களின் நோக்கம் வெற்றி தான். எதிராக இருப்பவர் எதிராளி, (Opponent) எதிரியை அதாவது பகை வரை தோற்கடிக்க திறமை, வல்லமை, யூகம். வியூகம். விவேகம், தந்திரம், தந்திறம் இப்படியெல்லாம் உண்டு.

வள்ளுவர் தமது காமத்துப்பால் பகுதியைத் தவிர, மற்ற இரண்டு அறத்துப்பால், பொருட்பாக்களிலும் சொற் சுவை நிரம்பக் கூறியவை அரசு அமைச்சு, படை. நட்பு, குடி:போன்றவை.

இப்படி எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும், “வெட்டு ஒன்றாக, துண்டு இரண்டாக’ என்பது போல வள்ளுவர் பாடினார்.

இதைச் செய். இப்படிச் செய். தவறு செய்யாதே ! தவறுக்குத் தண்டனை உண்டு. தண்டனையும் இப்படித் தான் இருக்கும் என நறுக்குத்தெறித்தாற் போல, சுருக்க மாக, அதிலும் ரத்தினச் சுருக்கமாக வள்ளுவர் பாடினார். படித்தவர்களை பண்பட வைத்தார்.

விளையாட்டுத் துறையிலே உள்ள நடைமுறை அனைத்துக்கும், வள்ளுவரின் கருத்துக்கள் அத்தனையும் அருமையாகப் பொருந்தி வருகின்றன.